ஐ.பி.எல் 2027 தொடருக்கு முன்னதாக அக்சர் படேலைத் தங்களது அணியில் சேர்க்கப் பல ஐ.பி.எல் அணிகள் ஆர்வம் காட்டியதாக டெல்லி கெபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அக்சர் படேல் மற்றும் அஷுதோஷ் சர்மா ஆகிய இருவரையும் எந்தச் சூழ்நிலையிலும் வேறு அணிக்கு மாற்ற முடியாது என்று டெல்லி அணி திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட சில அணிகள் அக்சர் படேலைத் தங்களது அணியில் சேர்க்க முயற்சி செய்ததாகத் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.