ஐ.பி.எல். 2027 தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 16 ம் திகதி கோவாவில் நடைபெற உள்ளது. அன்று காலை 11 மணிக்கு ஏலம் தொடங்கும் என்று ஐ.பி.எல். நிர்வாகக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மொத்தம் 89 வீரர்கள் அணிகளால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் 34 பேர் வெளிநாட்டு வீரர்கள். ஏலத்தில் வெற்றிடமாக உள்ள 66 இடங்களை நிரப்புவதற்காக டிசம்பர் 16 ம் திகதி வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது.