உலகிலுள்ள விண்வெளி ஆராய்ச்சி மையங்களில் முதன்மையாகத் திகழும் அமெரிக்காவின் நாசா(NASA) விண்வெளி ஆய்வு நிறுவனமானது புதிய வரலாற்று சாதனையொன்றைப் படைத்திருக்கிறது.
2,590 கோடி KM தூரம் கொண்ட ஒரு ஒளிநாள் தொலைவைக் கடந்து நாசாவின் 'வாயேஜர் 1' என்ற விண்கலம் சாதனை படைத்துள்ளது. 1977ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட 'வாயேஜர் 1' விண்கலமானது 49 ஆண்டுகள் பயணித்து இந்த வரலாற்று வெற்றியை நாசாவிற்குப் பரிசளித்துள்ளது.
மனித குலத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள் முதல் முறையாகப் பூமியிலிருந்து ஒரு ஒளிநாள் தூரத்தைக் கடந்த இந்த சந்தர்ப்பமானது விண்வெளி ஆராய்ச்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.