Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
29
இறைச்சியை சாப்பிட்டால் ஆபத்தா !

SOORIYAN GOSSIP - இறைச்சியை சாப்பிட்டால் ஆபத்தா !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

51 Views

முறையாகச் சமைக்கப்படாத மாட்டிறைச்சி, பன்றியிறைச்சி உள்ளிட்ட இறைச்சி வகைகளை உண்பதால் நாடாப்புழுக்கள் (Tapeworms), உருளைப்புழுக்கள் (Roundworms) மற்றும் ஈ-கோலி (E. coli), சால்மோனெல்லா (Salmonella) போன்ற பக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்படுகிறது.

 


 

இத்தொற்றுகள் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, உடல் எடை குறைதல் மற்றும் இரத்தசோகை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.குறிப்பாக, பன்றியிறைச்சியுடன் தொடர்புடைய Taenia solium நாடாப்புழுவின் முட்டைகள் உடலுக்குள் சென்றால், அவை மூளை, கண்கள் மற்றும் தசைகளைப் பாதித்து வலிப்பு உள்ளிட்ட தீவிர உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். தொடர்ச்சியான வயிற்றுவலி, அஜீரணம், பசியின்மை, உடல் சோர்வு மற்றும் மலத்துடன் புழுக்கள் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறான தொற்றுகளைத் தவிர்ப்பதற்கு இறைச்சியை உரிய வெப்பநிலையில் முழுமையாகச் சமைத்து உண்பது அவசியமாகும். இறைச்சியின் உட்பகுதியும் நன்றாக வெந்துள்ளதை உறுதிப்படுத்துவதுடன், பச்சை இறைச்சியைக் கையாளும் போதும் உணவு தயாரிக்கும் போதும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அரை அவியல்களில் இறைச்சியை உண்பதைத் தவிர்ப்பதன் மூலம் ஒட்டுண்ணி மற்றும் பக்டீரியா தொற்றுகளின் அபாயத்தைக் குறைக்க முடியும்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top