'Passion Fruit' என்ற பெயரில் எங்கள் அனைவருக்கும் பரீட்சயமான கொடித்தோடம் பழத்தை சுவைக்காத நபர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம்.
இலங்கையில் கொடித்தோடை என்று அழைக்கப்படும் இந்தப் பழத்தை தாட்பூட் பழம் என்றும் அழைப்பர். பெரும்பாலானோருடைய வீட்டின் முற்றத்தில் அழகுக்காக வளர்க்கப்படும் இந்தக் கொடித்தோடை மரத்தின் பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல சத்துகளைக் கொண்டவையாகும்.
இந்தக் கொடித்தோடம் பழத்தை உண்பதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்...
● Vitamin A, C, B1, B2, B5, கல்சியம் மற்றும் புரதம் அதிகமாக நிறைந்துள்ள கொடித்தோடம் பழமானது கண்களுக்கு ஆரோக்கியம் தரக்கூடியதாகும்.
● அதிக கொழுப்பானது இரத்த நாளங்களில் உறிஞ்சப்படுவதைத் தடுப்பதற்கு உதவி செய்யும்.
● மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்.
● இதிலுள்ள Vitamin A மற்றும் Vitamin C என்பன சருமத்தை இளமையான தோற்றத்துடன் வைத்திருக்க உதவும்.
● மக்னீசியம், கல்சியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ள இப்பழமானது எலும்பின் பலத்திற்கு உதவி செய்யும்.
● Vitamin C அதிகம் நிறைந்துள்ள கொடித்தோடம் பழமானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.