கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பரத் முரளிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டோரதி' திரைப்படத்திலிருந்து 'முத்துமணி' பாடல் வெளியாகியுள்ளது.
இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்பாடலை அவரே ஸ்வேதா மோகனுடன் இணைந்து பாடியுள்ளார்.
ஏற்கனவே இத்திரைப்படத்தின் முதல் பாடலான 'கல்யாண விருந்து' மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த மெலடி பாடல் இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.