51 Views
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள IPL தொடரை முன்னிட்டு டெல்லி கெபிடல்ஸ் அணி தனது பயிற்சியாளர் குழுவில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள உள்ளது. இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ், டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ராவும் பயிற்சியாளர் குழுவில் இணைந்து சுழற்பந்து வீச்சு பிரிவுடன் பணியாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க உள்ளதாகவும், முன்னாள் சகலதுறை வீரர் யுவராஜ் சிங் துடுப்பாட்டம் அல்லது உதவி பயிற்சியாளர் பொறுப்பில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் சௌரவ் கங்குலி, யுவராஜ் சிங், சமிந்த வாஸ், அமித் மிஸ்ரா என முன்னாள் நட்சத்திர வீரர்கள் அடங்கிய புதிய பயிற்சி குழுவுடன் டெல்லி கெபிடல்ஸ் அடுத்த IPL தொடரை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. எனினும், முழுமையான பயிற்சியாளர் குழுவை அணி நிர்வாகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.