வளர்ந்து வரும் வீரர்களுக்கான 50 ஓவர் கொண்ட ஆசிய கிரிக்கெட் தொடர் கட்டார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த தொடரின் 8-ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா 'ஏ' அணி - பாகிஸ்தான் 'ஏ' அணிகள் மோதின.பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்தத் தோல்விக்குப் பிறகு அணித்தலைவர் திலக் வர்மா செய்தியாளர்களிடம் அதுகுறித்து பேசினார்.
"நான் போட்டியில் வெற்றி பெறவில்லை என்றால், அது எனக்குச் சிறந்ததல்ல. இருப்பினும், நான் எப்போதும் இன்னிங்ஸை முடிந்தவரை இறுதிவரை கொண்டு செல்லவே விரும்புவேன், இன்றும் அதுதான் எனது முயற்சியாக இருந்தது.ஆனாலும் இது நாங்கள் வென்றிருக்க வேண்டிய போட்டி" எனக் குறிப்பிட்டுள்ளார்.