இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான T20 கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகளில், இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸ் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தொடரின் எஞ்சிய போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் வீரர் தெரிவில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
முதல் போட்டியில் வில் ஜாக்ஸின் வலது கையில் முறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் தொடரின் எஞ்சிய நான்கு போட்டிகளிலும் விளையாடமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது. அவருக்குப் பதிலாக அணியில் இணைக்கப்படும் வீரர் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.