நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மொஹமட் சிராஜை விளையாடிய பதினொருவரில் சேர்க்காதது குறித்து இந்திய அணித்தலைவர் சுப்மன் கில் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் பேசுகையில், "சிராஜ் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அவரை அணியில் இருந்து நீக்குவது மிகவும் கடினமான முடிவு நாங்கள் நிறைய போட்டிகளில் ஒன்றாக விளையாடியுள்ளோம். அவரை ஆரம்ப காலத்திலிருந்தே எனக்கு தெரியும். டெஸ்ட் போட்டிக்கு முன்பே அவரிடம் பேசி இந்த முடிவை விளக்கினேன். அவர் அதைப் புரிந்துகொண்டார். தற்போதைய தேவை மற்றும் திறமை அடிப்படையிலேயே வீரர்களை தேர்வு செய்தோம். சிராஜ் போன்ற வீரர் இதிலிருந்து இன்னும் வலுவாக மீண்டு வருவார்," எனக் குறிப்பிட்டுள்ளார்.