பிரபல ஹொலிவூட் இயக்குநரான லீ க்ரோனின் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி வெளியான 'லீ க்ரோனின்ஸ் த மம்மி' திரைப்படம் இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
பழமையான சாபம், மர்மமான சம்பவங்கள், அதிரடியான காட்சிகள் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும் பின்னணி இசை என்பன, திகில் திரைப்படங்களை இரசிக்கும் இரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருந்தது.
திரையரங்குகளில் வெளியான போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த 'லீ க்ரோனின்ஸ் த மம்மி' திரைப்படம் எதிர்வரும் 17ஆம் திகதி OTT தளத்தில் வெளியாகவுள்ளது.