இயக்குநர் நெல்சனின் இயக்கத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்த வெற்றித் திரைப்படமாக அமைந்திருந்தது.
இதன் வெற்றியைத் தொடர்ந்து 'ஜெயிலர் 2' திரைப்படம் உருவாகி வந்த நிலையில், அதன் முதல் Update இன்று வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் முதல் பாடல் எதிர்வரும் 21ஆம் திகதி வெளியாகவுள்ளதாகத் திரைப்படக்குழு அறிவித்துள்ளது.
இந்த வருடம் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி 'ஜெயலர் 2' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.