உபாதை காரணமாக இந்தியாவுக்கு எதிரான T20 தொடரிலிருந்து நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர்களான மார்க் சாப்மன் மற்றும் ஷேக் போல்க்ஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை (NZC) தெரிவித்துள்ளது.
அதேவேளை இந்த இரண்டு வீரர்களுக்கும் நியூசிலாந்து T20 அணியில் பிரதியீட்டு வீரர்களாக ஜோஷ் கிளார்க்சன் மற்றும் ப்ளையர் டிக்னர் ஆகியோர் இணைக்கப்பட்டிருக்கின்றனர்.
நியூசிலாந்து – இந்தியா ஆகிய இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடர் ஒக்டோபர் 22ஆம் திகதி கிறைஸ்ட்சேர்ச் நகரில் ஆரம்பமாகுகின்றது.