நமக்கு எளிதாக கிடைக்க கூடிய பழம் தான் வாழைப்பழம். இதில் உடலுக்கு தேவையான எண்ணற்ற பலன்கள் அதிகமாக காணப்படுகிறது. அழகான சருமத்திற்கு வாழைப்பழ பெக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ஒரு வாழைப்பழத்தை எடுத்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும் இதனுடன் 2 முதல் 3 சொட்டு glycerin சேர்த்து சந்தனப்பொடி சிறிதளவும் சேர்த்து நன்று கலக்க வேண்டும். பின்னர் முகத்தை நன்றாக கழுவி இந்த கலவையை முகத்திற்கு நன்றாக பூச வேண்டும்.
20 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீரைக்கொண்டு முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் உங்கள் முகம் எப்போதும் பளபளப்பாக காணப்படும்.