இந்திய சினிமா இதுவரை பார்த்திராத Hybrid Live Action தொழில்நுட்பத்தில் 'மகாவீர் கர்ணா' திரைப்படம் உருவாகியுள்ளது.
மகாபாரதத்தில் அனைவருக்கும் பிடித்த மாவீரன் கர்ணனின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரமேஷ் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள 'மகாவீர் கர்ணா' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
புதிய தலைமுறை பார்வையாளர்களுக்கான பிரம்மாண்டப் படைப்பாக உருவாகியுள்ள 'மகாவீர் கர்ணா' திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.