66 Views
சாய் சுதர்சனுக்கு வலது கால் பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இலங்கை தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அணியின் தேர்வாளர்கள் சர்பராஸ் கானை மாற்று வீரராக தேர்வு செய்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அனுபவம் கொண்ட சர்பராஸ் , இலங்கையின் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான போட்டிகளில் இந்திய அணிக்கு முக்கியமான தேர்வாக அமையலாம் என கிரிக்கெட் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியை முன்னிட்டு இரு அணிகளும் தயாராகி வருகின்றன. இதனிடையே, அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ள சர்பராஸ் கானுக்கு விளையாடும் பதினொருவர் அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது தற்போது இரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.