சூர்யா மற்றும் மமிதா பைஜு இணைந்து நடித்துள்ள ‘ Vishwanath and sons ’ திரைப்படம் எதிர்வரும் 14 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இதனையொட்டி இடம்பெற்ற திரைப்பட Promotion நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மமிதா பைஜு தனது சிறுவயது நினைவொன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.
திருவனந்தபுரத்தில் 8ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, சூர்யாவை நேரில் பார்க்க முடியாமல் போனதால் தான் அழுததாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு நடிகர் சூர்யாவுடன் தனது சகோதரர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்த்து மிகவும் வருத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் இன்று அதே திருவனந்தபுரத்தில் சூர்யாவுடன் இணைந்து அவரது திரைப்படத்தில் நடித்தது மிகப்பெரிய பாக்கியம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மமிதாவின் இந்தப் பேச்சு இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.