Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
01
"சுட்டா சூரியனை" தான் All Time Favourite!- ஜேசன் சஞ்சய்

SOORIYAN GOSSIP - "சுட்டா சூரியனை" தான் All Time Favourite!- ஜேசன் சஞ்சய்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

38 Views
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீக் கிஷன் நடித்துள்ள ‘சிக்மா’ திரைப்படம் நேற்றுமுன்தினம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ‘ஜன நாயகன்’ திரைப்படம் கடந்த 23 ஆம் திகதி  வெளியானதை தொடர்ந்து ‘சிக்மா’ திரைப்படத்தின் ரிலீஸ் திகதியை  குறிப்பிடாமல் திரைப்படக்குழு தள்ளி வைத்துள்ளது.
இந்நிலையில், திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக ஜேசன் சஞ்சய் அளித்த பிரத்யேக நேர்காணல் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


அந்த நேர்காணலில், "உங்கள் பெயரைக் கொண்ட ஹாலிவுட் அதிரடி நடிகர் ஜேசன் ஸ்டேதம், 'சிக்மா' திரைப்படத்தை பார்த்துவிட்டு ஹாலிவுட்டில் படம் பண்ண கூப்பிட்டால், இந்தியாவிலிருந்து எந்த சிறந்த நடிகரை கூட்டிச் செல்வீர்கள்?" என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த ஜேசன் சஞ்சய், "எனக்கு முதலில் நினைவுக்கு வருவது அப்பா (விஜய்) தான். இருவரும் இணைந்தால் அது அட்டகாசமான கூட்டணியாகவும் இருக்கும். நான் இப்போது தெரிவிக்கும் இந்த கருத்தை நடிகர் ஜேசன் ஸ்டேதம் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று பதில் அளித்தார்.

தொடர்ந்து தனக்கு பிடித்த இசையமைப்பாளர் குறித்து பேசிய சஞ்சய், தனக்கு யுவன் சங்கர் ராஜாவை மிகவும் பிடிக்கும் என்றும், தனது ‘சிக்மா’ படத்திலும் யுவன் ஒரு பாடல் பாடியுள்ளார் என்றும் பகிர்ந்து கொண்டார். மேலும், ஆர்யா நடிப்பில் வெளியான ‘சர்வம்’ படத்தில் இடம்பெற்ற "சுட்டா சூரியனை" பாடல் தான் யுவன் இசையில் தனக்கு மிகவும் பிடித்த All Time Favourite பாடல் என்றும் கூறினார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து, தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் மீது, எதிர்க்கட்சியினர் அவர் குடும்பத்தை கவனிப்பதில்லை என பல்வேறு அரசியல் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். தற்போது ஜேசன் சஞ்சய் தனது தந்தை மீது வைத்துள்ள பாசத்தையும், மரியாதையும் வெளிப்படையாகப் பேசியுள்ளது இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top