நூற்றாண்டைக் கடந்த பிரபலமான திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான 'Warner Bros. Discovery' நிறுவனத்தை $110 பில்லியனுக்கு வாங்கி சொந்தமாக்கியுள்ளது 'Paramount Skydance' நிறுவனம்.
இந்நிறுவனத்தை வாங்க எதிர்ப்புத் தெரிவித்து, 12 அமெரிக்க மாகாணங்களில் உள்ள ஹொலிவூட் எழுத்தாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கானது பல நாட்களாக இழுபறியிலிருந்து தற்போது, ஆண்டுக்கு 30 படங்களை 'Paramount' நிறுவனம் கட்டாயமாக வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் வழக்கிற்குத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, 'Warner Bros. Pictures' நிறுவனம் சார்பில் நிலுவையிலுள்ள அனைத்துத் திரைப்படங்களையும் 'Paramount Skydance' நிறுவனம் வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.