நடிகர் சூர்யாவின் 46வது திரைப்படமான 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா, மமிதா பைஜு, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், இயக்குநர் வெங்கி அட்லூரி, நடிகை ராதிகா சரத்குமார், நடிகர் சுனில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய மமிதா பைஜு,
"சூர்யா சாரை பார்த்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். இதற்கு முன்பு அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு தவறிவிட்டது. ஆனால் இந்த முறை அந்த வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கஜினி திரைப்படத்தில் இருந்தே சூர்யா சார் மீது எனக்கு 'கிரஷ்' இருக்கிறது. அவருடன் இணைந்து பணியாற்றியது மிகவும் சந்தோஷமாக இருந்தது’ என்றார்.
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகின்ற 14ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், மமிதா பைஜு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.