திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வரும் 'ஜனநாயகன்' திரைப்படம், தனது இரண்டாவது வார இறுதியில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமான வசூல் சாதனையை பதிவு செய்துள்ளது.
இணையத்தில் திரைப்படம் லீக் செய்யப்பட்ட போதிலும், அதையெல்லாம் கடந்து நாளை அதிகாரப்பூர்வமாக ₹ 300 கோடி வசூல் மைல்கல்லைத் தொடவுள்ளது.
படம் இணையத்தில் வெளியான பிறகும், திரையரங்குகளை நோக்கி இரசிகர்களையும் பொதுமக்களையும் பெருமளவில் ஈர்க்க முடிவது, நடிகர் விஜயின் அசைக்க முடியாத திரைப் பிரபலத்தையும் மக்கள் ஆதரவையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
தமிழ்நாட்டைத் தாண்டி பிற மாநிலங்களிலும் ஏன் உலகம் முழுவதும் ஜனநாயகன் திரைப்படம் வலுவான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. குறிப்பாக, இந்த ஆண்டில் கேரள மாநிலத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை ஜனநாயகன் தட்டிச் சென்றுள்ளது.
தமிழ்நாடு பாக்ஸ் ஆபீஸில் ஜனநாயகன் திரைப்படம் ஏற்கனவே ₹ 150 கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டுத் திரை வரலாற்றிலேயே தொடர்ச்சியாக மூன்று திரைப்படங்களில் ₹ 150 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டிய ஒரே நடிகர் என்ற வரலாற்று சாதனையை விஜய் பதிவு செய்துள்ளார். (Leo - ₹231 கோடி
GOAT - ₹220 கோடி)
திரைத்துறை சவால்களையும் தாண்டி, பாக்ஸ் ஆபீஸில் தொடர் சாதனைகளைப் படைத்து வரும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இந்த பிரம்மாண்ட வெற்றி, வர்த்தக ரீதியாக தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது."