எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கை அணிக்கெதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்திய அணி இலங்கை வரவுள்ளது.
இதற்கிடையில், எதிர்வரும் 7ஆம் திகதி இலங்கை A அணியுடன் 4 நாட்கள் கொண்ட ஆட்டமாக இடம்பெறவிருந்த பயிற்சி ஆட்டமானது தற்போது 3 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாக BCCI அறிவித்துள்ளது.
சுப்மன் கில் தலைமையில் இலங்கை வரும் இந்திய அணியானது எதிர்வரும் 15ஆம் திகதி காலி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியிலும், அதனைத் தொடர்ந்து 23ஆம் திகதி கொழும்பு SSC மைதானத்தில் 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் ஆடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.