இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரன் கோலூன்றிப் பாய்தலில் தேசிய சாதனையை நிலைநாட்டியதன் மூலம், ஸ்கொட்லாந்தில் நடைபெற்று வரும் கிளாஸ்கோ 2026ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
இலங்கை நேரப்படி இன்று இரவு 11.35க்கு ஆரம்பமாகவுள்ள கிளாஸ்கோ பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் முதல் தடவையாக புவிதரன் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன், தியகம விளையாட்டரங்கில் நடத்தப்பட்ட திறன்காண் கோலூன்றிப் பாய்தல் தேர்வுப் போட்டியில் 5.20 மீற்றர் உயரத்தைத் தாவி தேசிய சாதனையைப் படைத்த புவிதரன், கிளாஸ்கோ போட்டியில் நிச்சயம் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.