அவுஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான Josh Hazlewood, தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் இன்னும் சாதிக்க வேண்டிய முக்கிய இலக்குகளில் இங்கிலாந்து, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்வதும் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஓய்வை பற்றி சிந்திக்கும் முன் இந்த மூன்று நாடுகளிலும் தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதே தனது விருப்பம் என அவர் கூறியுள்ளார்.
அடுத்த ஒரு ஆண்டில் அவுஸ்திரேலிய அணிக்கு கடினமான வெளிநாட்டு டெஸ்ட் சுற்றுப்பயணங்கள் காத்திருக்கின்றன. இந்தியாவில் Border–Gavaskar கிண்ணத்தை மீண்டும் வெல்வதும், இங்கிலாந்தில் ஆஷஸ் தொடரைக் கைப்பற்றுவதும், தென்னாப்பிரிக்காவில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்வதும் அணியின் முக்கிய இலக்குகளாக உள்ளதாக Josh Hazlewood தெரிவித்துள்ளார்.