59 Views
ஸ்ரேயாஸ் ஐயர் அணித்தலைவராக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி இன்னும் ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை. அயர்லாந்துக்கு எதிரான T20 தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்த இந்தியா, தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டT20 தொடரையும் இழந்தது . இதன் காரணமாக உலக சம்பியனான இந்திய அணி, சர்வதேச T20 தரவரிசையில் தனது முதலிடத்தையும் இழந்தது.
இதனால் ஸ்ரேயாஸ் ஐயரின் அணித்தலைமை குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக அபிஷேக் நாயர் பேசியுள்ளார். அவர் கூறுகையில், "ஒரு சம்பியன் அணியை புதிய தலைவரிடம் ஒப்படைக்கும் போது, அவருக்கு தேவையான சுதந்திரமும்,போதுமான கால அவகாசமும் வழங்க வேண்டும்". பொறுப்பேற்ற உடனேயே ஒருவரால் அணியில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.