இன்ஸ்டாகிராம், பயனர்களின் பொதுப் புகைப்படங்களைப் பயன்படுத்தி, யார் வேண்டுமானாலும் AI படங்களை உருவாக்கிக்கொள்ள அனுமதிக்கும் தங்களின் புதிய Muse Image அம்சத்தை மெட்டா நிறுவனம் அதிகாரபூர்வமாக நிறுத்தியுள்ளது.
இந்த அம்சம் அறிமுகமானபோது பயனர்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரது கணக்குகளிலும் தானாகவே இணைக்கப்பட்டிருந்தது, இதிலிருந்து வெளியேறும் option கூட settings பக்கத்தில் மிக ஆழமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதனால், ஒருவரது அனுமதி இல்லாமலேயே அவரது முகத்தை வைத்து யாரோ ஒரு அறிமுகமில்லாத நபர் போலியான AI படங்களை உருவாக்க முடியும் என்ற அபாயம் ஏற்பட்டது. இதற்கு எதிராகத் தொழில்நுட்ப வல்லுநர்கள், பொதுமக்கள் மற்றும் ஹொலிவுட் திரைக்கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட முன்னணி முகமைகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்ததால், பொதுமக்களின் கூட்டுப் போராட்டத்திற்குப் பணிந்து மெட்டா நிறுவனம் இந்த அம்சத்தை முழுமையாக நீக்கியுள்ளது.