5 முறை உலகக் கோப்பையை வென்றுள்ள பிரேசில் கால்பந்து அணி முதல்முறையாக இந்தியா வந்து சர்வதேச நட்புறவு போட்டியில் விளையாடுகிறது.
இந்தியா மற்றும் பிரேசில் அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்பு மிக்க நட்புறவு கால்பந்து போட்டி கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் ஸ்டேடியத்தில் எதிர்வரும் ஒக்டோபர் 3ஆம் திகதி நடக்கவுள்ளது.இதனை இந்திய கால்பந்து சம்மேளனம் நேற்று அறிவித்தது.
உலக தரவரிசையில் இந்தியா 138வது இடத்திலும், பிரேசில் 5வது இடத்திலும் உள்ளது. தரவரிசையில் உயர்ந்த நிலையில் உள்ள ஒரு அணியுடன் இந்தியா மோத இருப்பது இதுவே முதல் முறையாகும்.