Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
15
இங்கிலாந்தை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா!

SOORIYAN GOSSIP - இங்கிலாந்தை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

52 Views


Birminghamல் நேற்று  இரவு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் , இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் தங்கள் தோல்விப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த இந்திய அணி தற்போது தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இங்கிலாந்து அணி, 48ஆவது ஓவரில் 258 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 76 ஓட்டங்களைக் குவித்தார். லியாம் டாசனும் முக்கிய பங்காற்றி 68 ஓட்டங்களைப் பெற்றார்.  இந்தியத் தரப்பில், அக்சர் படேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் வெற்றியிலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, தலைவர் ஷுப்மன் கில்லின் 80 ஓட்ட உதவியுடன் 46ஆவது ஓவரிலேயே அந்த இலக்கை இலகுவாக எட்டியது.

மேலும், வொஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் ஆகிய இருவரும் அரைச்சதம் கடந்து, ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.  சிறப்பான சகலதுறை (all-round) ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக அக்சர் படேல் ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார். 

இவ்விரு அணிகளும் அடுத்ததாக, நாளை கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் மோதவுள்ளன.
மூன்றாவது ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை லண்டனில் உள்ள லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top