இன்றைய அவசர உலகத்தில் மன அழுத்தம், மாசு நிறைந்த சுற்றுச்சூழல் மற்றும் தவறான உணவு பழக்கம் காரணமாக பலருக்கும் முடி உதிர்வு பிரச்சனை காணப்படுகின்றது.
இந்த பிரச்சனைக்கான தீர்வு உங்கள் வீட்டு சமையல் அறையிலேயே இருக்கின்றது.
பத்து சின்ன வெங்காயத்தை அரைத்து அதன் சாற்றை எடுத்துக் கொள்ளவும். இந்தச் சாற்றை ஒரு பஞ்சில் நனைத்து தலை முடியின் வேர்க்கால்களில் நன்றாக தடவவும். 20 நிமிடங்கள் கழித்து shampoo பயன்படுத்தி அலசவும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்து வர முடி உதிர்வு குறையும்.
தேங்காய் எண்ணெயை மிதமான சூட்டில் காய்த்து, அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை,ஒரு தேக்கரண்டி வெந்தயம் மற்றும் சில செம்பருத்தி இலைகளை போட்டு சிறிது நேரம் கொதிக்க விடவும். எண்ணெய் ஆறியதும் அதை வடிகட்டி ஒரு போத்தலில் சேமித்து வைத்து இதனை வாரத்திற்கு மூன்று முறை தலையில் தேய்க்கவும். இவ்வாறு செய்யும் போது கூந்தல் வேரிலிருந்து உறுதியாவதுடன் இளநரையும் மறையும்.
அல்லது முட்டையின் வெள்ளை கருவோடு ஒரு தேக்கரண்டி ஒலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கலந்து அதனை கூந்தலில் தடவி 20 நிமிடங்கள் கழித்து மயில்டான shampoo போட்டு குளிக்கவும். இவ்வாறு செய்யும்போது முடி உடைவது தடுக்கப்பட்டு கூந்தல் தடிமனாகவும் மிருதுவாகவும் மாறுவதாக சொல்கிறார்கள்.
செயற்கை பதார்த்தங்களை பயன்படுத்துவதை விட வீட்டில் இருக்கக்கூடிய இயற்கையான பொருட்களை வைத்து பதார்த்தங்களை உருவாக்கி தலையில் அதனை தடவும் பொழுது கூந்தல் ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் வளருவதற்கு இவை உதவியாக அமைவதாகவும் கூறப்படுகின்றது.