உலகக் கால்பந்துப் போட்டிகளின் 'GOAT' என்று இரசிகர்களால் அழைக்கப்படும் லியோனல் மெஸ்ஸி பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.
நடப்பு உலகக் கிண்ணக் கால்பந்துத் தொடரிலும் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டி வந்த மெஸ்ஸி, தொடர்ந்து 9 போட்டிகளாக கோல் அடித்து வந்த தனது தொடர் சாதனையை இன்றைய காலிறுதிப் போட்டியில் தவறவிட்டிருக்கிறார்.
கடந்த உலகக் கிண்ணக் கால்பந்துத் தொடரின் இறுதி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக கோல் அடித்ததோடு, இந்த உலகக் கிண்ணக் கால்பந்துத் தொடரின் 5 ஆட்டங்களில் குறைந்தது ஒரு கோலையேனும் பதிவு செய்து வந்த மெஸ்ஸி பத்தாவது முறையாகவும் கோல் அடித்துத் தனது தொடர்ச்சியான சாதனையைத் தக்கவைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அந்த சாதனை முடிவுக்கு வந்திருக்கிறது.
இருப்பினும், உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான லியொனல் மெஸ்ஸி ஒட்டுமொத்த உலகக் கிண்ணக் கால்பந்து வரலாற்றில் அதிகமான(21) கோல்களை அடித்த வீரர் என்ற இமாலய சாதனையுடனும், அதிக முறை கோல் அடிப்பதற்கு உதவிய வீரர்(10 முறை) என்று சாதனையுடனும் முதலிடத்தில் உள்ளார்.