நம்மில் பலருக்கு தண்ணீர் தாகம் எடுத்தால், உடனே பாட்டிலை எடுத்து அவசரமாக நின்று கொண்டே கடகடவென குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால், இப்படி நிற்பதும் நடப்பதுமாக தண்ணீர் குடிப்பது நம் உடலுக்கு எவ்வளவு பெரிய தீங்கு தெரியுமா?
நின்றுகொண்டு குடிக்கும்போது, தண்ணீர் எந்தவித வடிகட்டுதலும் இன்றி வேகமாக வயிற்றுக்குள் செல்கிறது. இதனால் சிறுநீரகத்தின் வடிகட்டும் திறன் நாளடைவில் பாதிக்கப்படலாம்.
மேலும், நின்றுகொண்டு தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள திரவங்களின் சமநிலையை சீர்குலைக்கிறது. இது காலப்போக்கில் மூட்டுகளில் அதிகப்படியான நீர் கோர்த்துக்கொண்டு கடுமையான மூட்டு வலிக்கு வழிவகுக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அத்துடன் வேகமாக தண்ணீர் குடிப்பது செரிமான மண்டலத்தை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இதனால் உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்பட்டு, நெஞ்செரிச்சல் உருவாக வாய்ப்புள்ளது.
எனவே தண்ணீர் குடிக்கும் போது எப்போதும் நிதானமாக உட்கார்ந்து, மடக்கு மடக்காக குடிப்பது தான் உடலுக்கு மிகவும் நல்லது. இது உடல் வெப்பநிலையை சீராக வைக்கவும், செரிமானம் சிறப்பாக நடக்கவும் உதவும்.