சீன ஆராய்ச்சியாளர்கள் நனோ துகள்களைப் பயன்படுத்தி, முப்பரிமாண (Three-Dimensional) ஒளியியல் வெப்ப ஆவியாதல் (Photothermal Evaporation) எனும் புதிய பொருளை வடிவமைத்துள்ளனர்.
இந்தத் தொழில்நுட்பம் 90.2% சூரிய ஆற்றலை உறிஞ்சும் திறன் கொண்டது.
கடல்நீரை ஆவியாக்கத் தேவையான எரிசக்தியின் அளவை 45.7% குறைக்கிறது.
வெளிப்புற மின்சாரம் இன்றி, முற்றிலும் இயற்கையான சூரிய ஒளியைக் கொண்டே கடல்நீரை நன்னீராக மாற்றுகிறது.
இத் தொழில்நுட்பத்தை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் முழுமையாகச் செயல்படுத்தினால், தற்போதுள்ள போத்தல் தண்ணீரை விட மிகக் குறைந்த செலவில் நன்னீரை உற்பத்தி செய்ய முடியும் என்று ஆய்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மின்சார வசதி குறைவாக உள்ள பகுதிகளில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, இது ஒரு சிறந்த தீர்வாக அமையும் என்று கூறப்படுகிறது.