244 Views
ATM card இன் முன்பகுதியில் உள்ள 16 இலக்க எண், EMV Chip மற்றும் பின்பகுதியில் உள்ள CVV ஆகியவை உங்களது பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகின்றன.
EMV Chip card இன் முன்பகுதியில் உள்ள சிறிய சதுர வடிவிலான ,Gold Chip இதுவாகும். பழைய Magnetic Stripe Card களை விட இது மிகவும் பாதுகாப்பானது.
நீங்கள் பணத்தை எடுக்கும்போது, இந்த Chip ஒரு இரகசிய குறியீட்டை உருவாக்கி, அதை ATM இயந்திரத்துடன் பரிமாறிக்கொள்கிறது. இதனால், உங்கள் பணத்தை யாரும் திருட முடியாது.
Card Network , Visa card Mastercard அல்லது RuPay போன்ற நிறுவனங்களின் Logoக்கள் ATM card இல் இருக்கும். இந்த நிறுவனங்கள் தான் உங்கள் வங்கிக்கும், பிற நாடுகளின் வங்கிகளுக்கும் இடையே பணம் பரிமாற்றம் செய்ய உதவுகின்றன.
16-Digit Card Number இன் முன்பகுதியில் உள்ள 16 இலக்க எண் உங்களது வங்கி கணக்கு எண்ணை குறிக்கும் தனித்துவமான குறியீடாகும்.
Expiry Date உதாரணமாக 12/28 என்றால், 2028-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை அந்த Card செல்லுபடியாகும் என அறிந்துகொள்ளலாம் .
Card Verification Value என்பது , card இன் பின்பகுதியில் உள்ள 3 இலக்க இரகசிய எண்களாகும். Online shopping செய்யும்போது இந்த எண் அவசியம் தேவைப்படும்.
Magnetic Stripe card இன் பின்பகுதியில் இருக்கும் கறுப்பு நிற பட்டையானது இயந்திரங்களில் card இனை Swipe செய்யப் பயன்படுகிறது.