நடிகர் விஷால் திரைக்கதை எழுதி, இயக்கி, முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'மகுடம்' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான "நச்சிந்தி மச்சானே" பாடல் நேற்றைய தினம் வெளியானது.
மேலும் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் என்பதுடன் வேல்முருகன் மற்றும் பாடகி மங்லியும் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர்.
வண்ணமயமான திருவிழா பின்னணியில் அமைந்துள்ள இந்த ஆடம்பரமான பாடலுக்கு பிரபல நடன இயக்குநர்களான பிருந்தா, தினேஷ், அசார், மற்றும் அப்சர் ஆகியோர் இணைந்து நடன பயிற்சி அளித்துள்ளனர்.
இப்பாடலில் விஷாலுடன் இணைந்து நடிகை அஞ்சலி நடித்துள்ளார் என்பதுடன் இப்பாடல் திரையரங்குகளில் இரசிகர்களைக் கொண்டாட வைக்கும் பாடலாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.