மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் இரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் அர்ஜுன் தாஸ்.
அர்ஜுன் தாஸ் தற்போது அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘Con City’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் அன்னா பென், வடிவுக்கரசி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் திரைப்படத்தின் 3வது பாடலான ‘பிராடுபயலே’ பாடல் இன்று வெளியாகியுள்ளது .
நகரத்தில் வசிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தினரின் உணர்ச்சிகளை விவரிக்கும் கதைக்களம் என்றும், நிச்சயம் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் என்றும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த திரைப்படம் ஜூன் மாதம் 26ம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.