1961-ம் ஆண்டு பிரபல இயக்குநர் பீம்சிங்கின் இயக்கத்தில் இதே நாளில் மே மாதம் 27 ஆம் திகதி வெளிவந்த திரைப்படம் தான் 'பாசமலர்'.
அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக கொண்ட இப்படத்தில் சிவாஜி கணேசன் - சாவித்திரி அண்ணன் - தங்கையாகவே வாழ்ந்திருந்தனர்.
இப்படத்திற்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர்.
அண்ணன் - தங்கை பாசத்தையும், எந்தச் சூழ்நிலையிலும் கைவிடாத பாசப்பிணைப்பையும் சொன்ன பாசமலருக்கு திரைத்துறையில் உன்னதமான இடம் வழங்கப்பட்டது. படம் வெள்ளி விழா கண்டது.
இப்படத்தில் இடம்பெற்ற இளமையும், எளிமையும், இலக்கிய நயமும் கொண்ட வசனங்கனை 24 வயதே ஆன ஆரூர்தாஸ் எழுதியிருந்தார்.
'பாசமலர்' திரைப்படம் திரைக்கு வந்து இன்றுடன் 65 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளது.
65 ஆண்டுகள் கடந்து போனாலும் இன்றைக்கும் அனைவரது நெஞ்சிலும் வாடா மலராக நிலைத்து நிற்கிறது 'பாசமலர்'.