தற்போது செல்லப்பிராணிகள் பேசுவதை மனிதர்கள் புரிந்து கொள்ள உதவும் அளவிற்கு AI கருவிகள் வந்து விட்டன.
தங்களது வீட்டில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள், அவை என்ன பேசுகின்றன என்பதை புரிந்து கொள்ளும் வகையில் சீனாவின் Meng Xiaoyi என்ற நிறுவனம் AI
PettiChat ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனை உங்கள் செல்லப்பிராணியின் கழுத்தில் மாட்டியிருக்கும் போது, அதன் ஒலிகள், உணர்ச்சிகள் மற்றும் நடத்தையை அதிகத் துல்லியத்துடன் அடையாளம் கண்டு, AI உதவியுடன் எழுத்துக்களாக மாற்றி இந்த AI தொடர்புடைய Mobile செயலிக்கு அனுப்பும்.
27.2 கிராம் எடை கொண்ட இந்த PettiChat இல் GPS கண்காணிப்பு வசதியும் உள்ளதால் உங்கள் செல்லப்பிராணி எங்கே இருக்கிறது என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.