உலக Test Championship தொடரின் புள்ளிப்பட்டியலில் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்திய அணி ஒரு இடம் சரிந்து 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதற்கு முன் 5வது இடத்தில் இருந்த இந்திய அணி தற்போது 6வது இடத்தில் உள்ளது. இந்திய அணி இதுவரை விளையாடிய 9 டெஸ்ட் போட்டிகளில் 4 வெற்றிகள், 4 தோல்விகள் மற்றும் ஒரு சமநிலை முடிவு என 48.15 சதவீத புள்ளிகளைப் பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய பங்களாதேஷ் அணி புள்ளிப்பட்டியலில் ஒரு இடம் முன்னேறி 5வது இடத்தைப் பிடித்துள்ளது. அவுஸ்திரேலியா அணி முதலிடத்திலும், நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன.
இதன் மூலம் இந்திய அணி அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர்களில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. குறிப்பாக எதிர்வரும் போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றிகள் மட்டுமே இந்திய அணியின் உலக Test Championship இறுதிப்போட்டிக் கனவை வலுப்படுத்தும்.
இந்த நிலையில், இந்திய அணி அடுத்ததாக ஜூன் மாதத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.