19 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒரு முறையும், எதிர் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா இரண்டு முறை என மொத்தம் 14 லீக் போட்டிகளில் விளையாட வேண்டும்.
லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதன்படி இந்த தொடரில் மொத்தம் இறுதிப்போட்டியையும் சேர்த்து 74 போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில், 2028 ஐபிஎல் தொடரில் போட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஒரு அணி 18 லீக் போட்டிகளில் விளையாட வேண்டும். அதன்படி மொத்தம் 94 போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் இது தொடர்பாக அதிகாரபூர்வன அறிவித்தல் இன்னும் வெளியாகவில்லை.