தனது அசாத்திய நடிப்பால் இரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகர் மாதவன். தமிழில் மட்டும் இல்லாது தற்போது ஹிந்தியிலும் அதிகமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது. அந்த விழாவிற்கு நடிகர் மாதவன் அணிந்து வந்த கைக்கடிகாரத்தின் விலை தற்போது இரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாதவன் அணிந்து வந்த Nebula by Titan’s Jalsa என்ற கைக்கடிகாரம் இந்திய பெறுமதிப்படி 40 இலட்சம் ரூபாய் எனவும், அந்த நிறுவனத்தால் அது போல 10 கைக்கடிகாரங்கள் மட்டுமே இதுவரை தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.