Hip-Hop ஆதி இயக்கி நடிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் "அடி போடி" பாடல் நாளை வெளியாக உள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.
கல்லூரி மாணவனின் கனவு, காதல், வாழ்க்கைப் போராட்டங்களை எளிமையாகச் சொல்லிய 'மீசைய முறுக்கு' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 'மீசையை முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஆதி இயக்கி நடித்துள்ளார். சுந்தர் சி - குஷ்பு தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்தில் சைத்ரா, கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் என 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் teaser மற்றும் "Aura 10/10" என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து "பப்பாளி பழமே" மற்றும் "கோயிந்தம்மா" ஆகிய பாடல்கள் வெளியாகின.
இந்நிலையில், ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் "அடி போடி" பாடல் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.