இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ரவிதேஜா மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள 'இருமுடி' திரைப்படம், ஓகஸ்ட் 6ஆம் திகதி வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அதிகார்வபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று இத்திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி இரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இத்திரைப்படம் தமிழில் 'இருமுடிகட்டு' என்ற தலைப்புடன் நேரடியாக வெளியாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
'இருமுடிகட்டு' திரைப்படத்தின் கதைக்களமானது கடந்த காலத்தில் வன்முறை பின்னணி கொண்ட ஒரு தந்தை, தன் மகளின் ஆசைக்காக சபரி மலை செல்லும் சூழலை மையமாகக்கொண்டு நகர்கின்றது.