ஹாலிவுட் திரையுலகில் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி, உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் இதயங்களை ஒரே நேரத்தில் கவர்ந்து வருகிறது 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day) திரைப்படம்.
திரையரங்குகளில் வெளியானது முதல் வசூல் மழையில் நனைந்து வரும் இத்திரைப்படம், தற்போது உலக அளவில் சுமார் 21,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பிரம்மாண்ட சாதனையைப் படைத்துள்ளது.
உலகளாவிய வரவேற்பைத் தொடர்ந்து, இந்தியாவிலும் இத்திரைப்படத்தின் ஆதிக்கம் தொடர்கிறது.
திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போடும் இத்திரைப்படம், இந்தியாவில் மட்டும் கடந்த 25 நாட்களில் 580 கோடியை நெருங்கி வசூல் சாதனை நிகழ்த்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அடுத்தடுத்த நாட்களிலும் இத்திரைப்படத்தின் வசூல் வேட்டை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!