46 Views
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதை, முதன்முறையாக 2 சீன விஞ்ஞானிகள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
சீனாவின் யு டெங் மற்றும் ஹாங் வாங் ஆகியோரே இந்த விருதை தட்டிச் சென்றுள்ளனர்.
இதன்மூலம் 90 ஆண்டுகால இந்த விருது வரலாற்றில், விருதைப் பெறும் 3-வது பெண்மணி என்ற பெருமையை ஹாங் வாங் பெற்றுள்ளார்.
விஞ்ஞானி டேவிட் ஹில்பர்ட் முன்வைத்த வாயுக்களின் இயக்கம் குறித்த 100 ஆண்டுகால புதிருக்கு யு டெங் விடை கண்டுபிடித்துள்ளார்.
அதேபோல், 1917-ம் ஆண்டு ஜப்பான் விஞ்ஞானி சோய்ச்சி ககேயா எழுப்பிய கணித புதிருக்கு, ஹாங் வாங் முப்பரிமாண வடிவில் தீர்வு கண்டு உலகை வியக்க வைத்துள்ளார்