உலகம் முழுவதும் விஞ்ஞான வளர்ச்சியில் சிறந்து விளங்கும் நாடுகளால் பல வகையான ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
அந்த வகையில் தென்கொரிய விஞ்ஞானிகள், உயிரணுக்களைப் போலத் தன் வடிவத்தை மாற்றி, பிரிந்து பின்பு மீண்டும் இணையும் திரவு உலோக ரோபோவை(Liquid Metal Robot) கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார்கள்.
இவ்வகை ரோபோவானது சிறிய துளைகள் வழியாக ஊடுருவிச் செல்வதோடு, பொருட்களையும் பிடித்துக் கொண்டு செல்லும். தேவைப்படும் போது பல துளிகளாகப் பிரிந்து பின்பு மீண்டும் இணையும் திரவ உலோக ரோபோவாக வடிவமைத்திருக்கிறார்கள்.
காந்தப்புலம் மற்றும் Ultrasound உதவியுடன் கட்டுப்படுத்தப்படும் இந்த ரோபோவை வைத்து, மனித உடலுக்குள் துல்லியமாக மருந்து செலுத்துவதுடன் எதிர்காலத்தில் நுண் அறுவை சிகிச்சைகள் செய்வதற்கும் இது பெரிதும் உதவியாக இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.