51 Views
மாலை நேரத்திற்கு ஏற்ற சுவையான, ஆரோக்கியமான மற்றும் எளிதான மசால் வடை
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
பூண்டு - 3 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
சமையல் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து, தண்ணீர் இல்லாமல் வடிகட்டிக் கொள்ளவும்.
மிக்ஸியில் பெருஞ்சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு மற்றும் ஊறவைத்த பருப்பைச் சேர்த்து ஒன்று இரண்டாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பிசையவும்.
மாவை சிறு உருண்டைகளாக எடுத்து, வடையைத் தட்டி, காய்ந்த எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.