கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும், ரஜினிகாந்தின் 173வது திரைப்படமான ‘தர்மன்’ திரைப்பட படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமானது.
சென்னையில் நடைபெற்ற விழாவில், திரைப்படத்தின் தலைப்பு வெளியிடப்பட்ட நிலையில் இன்று திரைப்பட படப்பிடிப்பு ஆரம்பமானதாக காணொளி வெளியிட்டு திரைப்படக்குழு அறிவித்துள்ளது.
கமல்ஹாசனோடு இணைந்து ஆர். மகேந்திரனும் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார் என்பதுடன் தமிழ் திரையுலகின் இரண்டு முக்கிய நடிகர்கள் இணையும் இத்திரைப்படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.
மேலும் அனிருத் ரவிச்சந்தர் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பதுடன் திரைப்படம் குறித்த பிற தகவல்கள் மற்றும் நடிகர்கள் அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.