ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். இத்திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். மேலும் இத்திரைப்படத்தில் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.
‘சிக்மா’ திரைப்படத்தில் ஒரு சிறப்பு பாடலில் ஜேசன் சஞ்சய், கேத்தரின் தெரசா நடனமாடி உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஆக்சன் பின்னணியில் உருவாகும் இந்தப் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
சமீபத்தில் ‘சிக்மா’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், ‘சிக்மா’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘அய்யய்யோ அம்மாடி’ நாளை வெளியாகும் என திரைப்படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படம் கடந்த ஜூலை 31ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின் ஒத்திவைக்கப்பட்டது.