25 Views
இயக்குநர் ரவி நெலகுதிதி இயக்கத்தில் உருவாகி வரும் துல்கர் சல்மானின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது. ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘பொம்மா பொம்மா’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்பாடலை கபில் கபிலன் பாடியுள்ளார்.