ஏக்தா கபூர் தயாரிப்பில் நடிகை தமன்னா நடித்துள்ள Bollywood திரைப்படமான ‘தி விவான்’ திரைப்படத்தின் Release திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழித் திரைப்படங்களில் இரண்டு தசாப்தங்களாக முன்னணிக் கதாநாயகியாகத் தனது இடத்தைத் தக்கவைத்துள்ளார்.
ஒரு சிறப்புப் பாடலில் நடிக்க அவர் இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 கோடி வரை சம்பளம் பெறுவதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவர் 'புருஷன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் பேண்டஸி பாணியில் உருவாகியுள்ள ‘தி விவான்’ திரைப்படத்தினை தீபக் குமார் மிஷ்ரா இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் நாயகியாக தமன்னா நடிக்க, நாயகனாக சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ளார்.
இவர்களுடன் சுனில் குரோவர், மனீஷ் பால், ஸ்வேதா திவாரி, அனுப் சோனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
தற்போது தமன்னா நடிப்பில் ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் நிலையில், ‘தி விவான்’ திரைப்படம் செப்டம்பர் 25ஆம் திகதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.